Cinar kavithaigal.
வரலாற்றில் இன்று
25/11-வியாழன்
1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான்.
1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன.
1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.
30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது.
1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார்.
1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹாகன் என்ற பெயரில் நார்வே மன்னராக முடிசூடினார்.
1917 : முதலாம் உலகப் போர்:- ஜெர்மனி படை மொசாம்பிக், தான்சானியா எல்லையில் போர்ச்சுகீஸ் ராணுவத்தை தோற்கடித்தது.
1926 : அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்தனர்.
400 பேர் காயமடைந்தனர்.
1936 : ஜப்பானும் ஜெர்மனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1941 : இரண்டாம் உலகப்போர்:- பிரிட்டனின் பர்ஹாம் என்ற கப்பல் ஜெர்மனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போர்:- பிரிட்டன், டெப்ட்ஃபோர்ட் நகரில் கடைத் தொகுதியில் ஜெர்மனி விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
1950 : அமெரிக்காவின் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.
1960 : டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்
1973 : கிரேக்கத் தலைவர் ஜார்ஜ் பாப்படபவுலஸ் ராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
1975 : சுரிநாம் நெதர்லாந்திடமிருந்து விடுதலை பெற்றது.
1981 : ரொடீஷியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாப்ரிக்காவின் டர்பன் நகருக்கு செலுத்தப்பட்டது.
1987 : பிலிப்பைன்ஸை சூறாவளித் தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
1992 : செக்கோஸ்லோவாக்கியாவின் நாடாளுமன்றம் செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரண்டாக 1993 ஜனவரி 1 லிருந்து பிரிக்க முடிவு எடுத்தது.
1996 : அமெரிக்காவின் நடுப்பகுதியை சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
2000 : அஜர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
2006 : சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.
2008 : இலங்கையின் வடக்குப் பகுதியில் நிஷா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
கருத்துகள்